- Log in to post comments
மக்கள்/நுகர்வோருக்கு குடிநீர் வழங்கப்படுவதில் பல்வேறு நிலைகளில் விதிமுறைக்குட்பட்ட செயல்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. நீர் சுமந்து செல்லும் ஊர்திகள், அவற்றின் கொள்ளளவு, ஒவ்வொரு ஊர்தியும் ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது போன்ற விவரங்களை ஒரு கட்டமைப்புக்குள் நிர்ணயித்து இந்தச் செயல்பாடு நிறைவேற்றப்படுகிறது.
குடிநீர் ஊர்திகளின் (tanker lorries) கொள்ளளவு 6000 லிட்டர்கள் முதல் 9000 லிட்டர்கள் வரை வேறுபடும். நகரில் மொத்தம் 41 நீர் வழங்கு நிலையங்களும் 191 நீர் நிரப்பு மையங்களும் உள்ளன.
குடிநீர் ஊர்திகளில் நிரப்பப்படும் நீரின் அளவு, தேவைப்படும் பகுதிகளில் நுகர்வோருக்கு வழங்கப்படும் அளவு ஆகிய விவரங்களைக் கண்காணித்துப் பதிவு செய்யும் முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.