திறன்மிகு சுற்றுச்சூழல்
திறன்மிகு சுற்றுச்சூழல்
சீர்மிகு நகரம் என்பது சமூக நலன் சார்ந்த தொழில் நுட்பம், பொருளாதார நிலை போன்றவற்றின் வளர்ச்சி விகிதங்கள் உள்ளடக்கி, தன்னிறைவு பெற்றுத் திகழும் ஓர் கட்டமைப்பாகும்.
பெருநகர சென்னை மாநகராட்சி, பல்வேறு விதமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் நம் வாழ்வாதாரத்தின் அடிநாதமாய் விளங்கும் சுற்றுச்சூழலை முதன்மைப்படுத்தும் விதிமுறைகளை உறுதியாய்க் கடைபிடிக்குமாறு அனைத்துப் பிரிவுகளுக்கும் வலியுறுத்துகிறது.
பெருநகர வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான தகவல் தொழில்நுட்ப விவரங்களை முறைப்படுத்தி, பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தும்போது, ஒவ்வொரு நிலையிலும் அவற்றைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி, அவற்றின் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் திறனான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
சுற்றுசூழலை மையப்படுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்ட அமைப்பு பல்வேறு திட்டப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி வருகிறது.
முதல் கட்டமாக கீழ்க்கண்ட திட்டப்பணிகளை முழுவதுமாக நிறைவேற்றி அவற்றை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைத்துள்ளது.