- Log in to post comments
இன்றைய உலகில் கண்ணால் காண்பதை அனுபவ பூர்வமாக உணர்வதே உண்மை என்று ஏற்கப்படும் மனநிலை உருவாகியுள்ளது.
மின்னெழுத்து அல்லது மின் எண்ணியல் அனுபவம் (Digital Experience) கணினித் திரைகள், கையகக் கணினிகள் (tablets), வர்த்தக மையக் கணினித் திரைகள் (kiosks), வீடியோ திரைகள் மூலமாக மக்களைச் சென்றடைகிறது.
அந்தந்த கால கட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளை ஒரு மையப்பகுதியிலிருந்து அறிந்து கொள்ளக்கூடிய வசதிகள் இதன்மூலம் கிடைக்கப்பெறலாம்.
இதற்கான ஒளியமைப்பு, சூழல், தட்பவெப்ப நிலை போன்றவை கச்சிதமாக முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
Read more
மக்களின் வாழ்வுமுறை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளை எளிதாக்க தொழில்நுட்பம் உறுதுணையாய் விளங்குகிறது என்பது கண்கூடு. சீர்மிகு நகர அமைப்புப் பிரிவின் தொழில்நுட்பச் செயல்பாடுகள் சென்னை நகரவாழ் மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நுணுக்கமாகவும் எளிதில் பயன்படுத்தத்தக்க வகையிலும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.