- Log in to post comments
ஒரு நகரம் என்பது வெறும் கட்டிடங்கள், சாலைகள், மக்கள் மட்டுமே அடங்கிய இடமல்ல. நகரம் என்பது ஒரு சமூக அமைப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமூகநலன் சார்ந்த பொது இடங்களையும் ஏனைய கட்டமைப்புகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பராமரித்து மேம்படுத்துவதற்காகவே அரசு சார்ந்த அமைப்புகள் அன்றாடம் செயல்பட்டு வருகின்றன. இயற்கை சார்ந்த இடங்களைச் சிறந்த முறையில் பராமரித்து பசுமைச் சூழலை நிலைநிறுத்துவற்கான பல்வேறு திட்டங்களை பெருநகர சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இவ்வகையில், பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பசுமைச்சூழல் நிறைந்த புகலிடமாகக் கருதப்படுகின்றன. மக்கள் காலாற நடப்பதற்கும், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும், அமைதியாக ஓய்வெடுப்பதற்கும், ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்வதற்கும் உரிய சமூக நல்லிணக்க மையமாகவும் பூங்காக்கள் திகழ்கின்றன.
நாம் வாழும் இந்த பூமிக்கோளின் நுரையீரலாகக் கருதப்படுபவை மரங்கள், செடி கொடிகள் போன்ற தாவரங்கள் நிறைந்த காடுகள்தான். வானம் பொழிவதற்கும் பூமி விளைவதற்கும் காடுகளே ஆதாரம். நகரச்சூழலில், பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதற்கு ஈடாக விளங்குபவை நம்மிடையே வாழும் மரங்களும், செடி கொடிகள் போன்ற தாவரங்களும்தான். காற்று மாசு பரவாமல் பாதுக்காப்பது, நிலத்தடி நீர் பெருகுவதற்குப் பெரிதும் துணை நிற்பது போன்ற வாழ்வாதாரச் சூழலுக்கு இயற்கை வளங்கள் இன்றியமையாதவை.
இதைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி எட்டு திறந்தவெளிப் பூங்காக்களை மறுசீரமைத்துள்ளது. இப்பூங்காக்களில் நிழல் தரும் மரங்கள், செடி கொடிகள் நிறைந்த சூழலில் மழைநீர் சேகரிப்பு மையங்களும், மின்னணு கழிவறை (e-toilet) மற்றும் கழிவுநீர் அகற்று மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்புக்காகவும் நடைமுறைத் தகவல் பதிவுக்காகவும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு வசதிக்காக மின் இணைய வசதியும் (wifi-hotspots) பொருத்தப்பட்டுள்ளன
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களினால் மக்களின் வசதியை முன்னிட்டு மறுசீரமைக்கப்படும் நகரக் கட்டமைப்புகள் வளர்ச்சி சார்ந்த மாறுதல்களுக்கு உட்படும் அதே நேரத்தில் சுற்றுசூழலில் மாசு ஏற்படாத வகையில் அதைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரிவாக இயங்கும் சீர்மிகு சென்னை நகர அமைப்பு சீரிய முறையில் நிறைவேற்றி வருகிறது. இதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டப்பணியின் ஒரு அங்கமாக நகரின் ABD வட்டத்தில் உள்ள மண்டலங்கள் 9 மற்றும் 10ல் எட்டு பூங்காக்களை மறுசீரமைத்துள்ளது.
வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் சீரிய முறையில் நிறைவேற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரமெங்கும் பசுமைச்சூழலை உருவாக்கும் முனைப்புடன் அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக மேற்கூறிய எட்டு பூங்காக்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுசூழல் மற்றும் காற்றின் தன்மை மேம்படுகிறது. பூங்காக்கள் மறுசீரமைக்கப்படுவதற்கான காரணங்களில் சில:
நகர்வாழ் மக்கள் நலமும் வளமும் நிறைந்த சூழலில் வாழ்ந்திடவும், சமூக நல்லிணக்கம் பெருகிடவும் ஏற்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களில் பூங்காக்கள் மறுசீரமைப்புத் திட்டமும் ஒன்று. நகரத்தின் எழிலுக்கு எழில் சேர்ப்பதுடன் பூங்காக்களால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள்: