Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

கழிவுப் பொருட்களிலிருந்து எரி மின்வாயு (Biogas) தயாரித்தல்

நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள நீர்நிலைகளில் நீர்ப்பூங்கோரை எனப்படும் நீர்த்தாவரங்கள் பரவியிருப்பது இயல்பு. இந்த நீர்த்தாவரங்கள் நீர்நிலைகளில் மழை நீர் வந்து சேர்வதற்கும் நீர் நிரம்புவதற்கும், நீர் இருப்புக்கும் தடையாக அமைந்துவிடுகின்றன. இவை நீர்நிலைகளின் தோற்றத்திற்கு ஊறு விளைவிப்பதுடன் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நீர்த்தாவரங்களினால் தேங்கும் நீர்த்திடல்களில் கொசுக்கள் போன்ற கிருமிகள் பெருகுவதால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உண்டாகிறது.

நீர்நிலைத் தாவரங்களிலிருந்து எரி மின்வாயுவாக (Biogas) மாற்றும் உருமாற்றுக் கலம்

இந்த நீர்த்தாவரங்களின் வளர்ச்சியை சீர்படுத்தி அவை குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்து பெருகிய நிலையில் அவற்றைக் களைந்து கிடங்குகளில் பதப்படுத்தி எரி மின்வாயுவாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நடைமுறைச் செயலாக்கம்

நீர்த்தாவரம் போன்ற இயற்கை வள ஆதாரங்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அவற்றின் மூலம் மக்களுக்குப் பயன் தரும் திட்டங்களை பெருநகர சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு ஐந்து டன் நீர்த்தாவரங்களை மறுசுழற்சி செய்து அதன்மூலம் எரி மின்வாயு தயாரிக்கும் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி உயரிய முறையில் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்படும் எரி மின்வாயு, மின்சார உற்பத்திக்கான கூடுதல் மூலப்பொருளாக விளங்குகிறது.

இந்தத் திட்டப்பணிக்கான முக்கிய அம்சங்கள் :-

நீர்நிலைகளின் தோற்றத்தையும் கட்டமைப்பையும் பாதுகாத்தல் கொசுக்கள் போன்ற கிருமிகள் நீர்த்தாவரங்களினால் உருவாகும் நீர்த்திடல்களில் முட்டையிடுவதையும் அதன்மூலம் தொற்றுக் கிருமிகள் பரவுவதையும் கட்டுப்படுத்துதல்

நீர்த்தாவரங்கள் மற்றும் நீர்நிலை சார்ந்த கழிவுகளிலிருந்து வளம் மிகுந்த உரங்கள் தயாரித்தல்

நீர்த்தாவரங்கள் மற்றும் நீர்நிலை சார்ந்த கழிவுகளிலிருந்து வளம் மிகுந்த உரங்கள் தயாரித்த

நீர்த்தாவரங்கள் மற்றும் நீர்நிலை சார்ந்த கழிவுகளை சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் அப்புறப்படுத்துதல்

சுற்றுச்சூழல் நட்பு முறையில் கழிவுகளை அகற்றுதல்

நீர் பதுமராகத்தைப் பயன்படுத்தி உயிர்வாயுவை உருவாக்குவதன் நன்மைகள்:-

நீர்நிலைகளின் தோற்றத்தையும் கட்டமைப்பையும் பாதுகாத்தல் கொசுக்கள் போன்ற கிருமிகள் நீர்த்தாவரங்களினால் உருவாகும் நீர்த்திடல்களில் முட்டையிடுவதையும் அதன்மூலம் தொற்றுக் கிருமிகள் பரவுவதையும் கட்டுப்படுத்துதல்

நீர்த்தாவரங்கள் மற்றும் நீர்நிலை சார்ந்த கழிவுகளிலிருந்து வளம் மிகுந்த உரங்கள் தயாரித்தல்

நீர்த்தாவரங்கள் மற்றும் நீர்நிலை சார்ந்த கழிவுகளிலிருந்து வளம் மிகுந்த உரங்கள் தயாரித்த

நீர்த்தாவரங்கள் மற்றும் நீர்நிலை சார்ந்த கழிவுகளிலிருந்து வளம் மிகுந்த உரங்கள் தயாரித்த

நிகழ்வு ஆய்வு

Water Hyacinth Project - Crystal River, Florida

Biologist Bob Knight is overseeing a project to bring back Water Hyacinth to Kings Bay in Crystal River, Florida.

Converting Problematic Aquatic Plants to Biofuel

Aquatic plants such as water chestnuts and hyacinths clog waterways and can be very problematic.