Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

திறன்மிகு மின்சக்தி

திறன்மிகு மின்சக்தி

திறன்மிகு மின்சக்தி எனப்படும் சூரிய மின்சக்தியை (SmartEnergy) உங்கள் மின்சாரத் தேவைகளுக்கான ஆதாரமாக நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் 100% புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியை பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். மிகச்சுலபமானதும் அதிக பயன் வழங்கக்கூடியதுமான இந்த மின் சக்தி சேவையைப் பெறுவதற்கு முன்பதிவுக் கட்டணம் கிடையாது. மேலும், சேவை ரத்துக் கட்டணம், சேவை துண்டிப்பு போன்ற எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது.
பொதுவாக நடைமுறையில் உள்ள அணு (nuclear energy), நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு, போன்ற தொல்படிவ எரிபொருட்கள் (fossil fuels) மின் உற்பத்தி முறைகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் காற்று மாசு அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாற்றாக, காற்று, புவிவெப்பம் (geothermal), நீர்மின்திறன் (hydropower), சூரியசக்தி (solar energy) போன்ற புதுப்பிக்கப்படக்கூடிய மின் உற்பத்தி முறைகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுசூழலைக் காப்பதுடன் மின்சக்தி சேமிப்புக்கும் வழி வகுக்கிறது.
இத்தகைய 100% புதுப்பிக்கப்படக்கூடிய திறன்மிகு மின்சக்தி உற்பத்தியின் மூலம் காற்று மாசு படுவதைத் தவிர்த்து பசுமையான சுற்றுசூழலை உருவாக்க முடியும்.
தலைசிறந்த தொழில்நுட்ப வழிமுறைகளுடன் இத்திட்டப்பணியைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

திட்டங்கள்