Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

மழை-வெள்ளநீர் மேலாண்மை

மாநகரெங்கிலும் கடந்த காலத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை-வெள்ளநீர் வடிகால் மையங்களில் பழுதடைந்த/துண்டிக்கப்பட்டுள்ள இணைப்புகளை செப்பனிட்டு மழை-வெள்ளநீர் முறையாக வடிந்து செல்லும் வகையில் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழை-வெள்ளநீர் மேலாண்மை வீடியோ

மழை-வெள்ளநீர் மேலாண்மை

இந்த வடிகால்களில் மழைநீர் தவிர குப்பை கூளங்கள், நெகிழிகள், ரசாயனக் கலவைகள் போன்றவை கலப்பதினால் மழைநீரின் தனித்தன்மை சீர்குலைந்து மாசடைந்து நீர்நிலைகளைச் சென்று அடைவதினால் நீர்நிலைகளும் மாசுபடும் நிலை உருவாகிறது.

மழைநீர் வடிகால்களுக்கும் கழிவுநீர் கால்வாய்களுக்கும் (சாக்கடைகள்) உள்ள வேறுபாடுகள்:

மழைநீர் வடிகால்களில் சேரும் வெள்ளநீர் வடிகட்டப்பட்டு நேரடியாக நீர்நிலைகளைச் சென்று அடைகிறது.

மழைநீர் வடிகால்களில் சேரும் வெள்ளநீர் வடிகட்டப்பட்டு நேரடியாக நீர்நிலைகளைச் சென்று அடைகிறது.

கழிவுநீர் கால்வாய்களில் சேரும் நீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளைச் சென்று அடைகிறது.

கழிவுநீர் கால்வாய்களில் சேரும் நீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளைச் சென்று அடைகிறது.

ஆகவே, பருவகாலங்களில் உண்டாகும் மழைநீர் மட்டுமே மழைநீர்-வெள்ள வடிகால்களைச் சென்றடையுமாறு கண்காணித்து நிலைப்படுத்துதல் அவசியம்.

பழுதடைந்த/துண்டிக்கப்பட்ட இணைப்புகள்:

பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வெள்ள வடிகால் மையங்களில் உள்ள இணைப்புகள் புயல், பெருமழை, வெள்ளம் போன்ற காரணங்களினால் பழுதடைந்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவற்றை அகற்றி மீள்கட்டமைப்பு செய்து அவை பயன்படும் நிலையில் மறுசீரமைப்பது மிக அவசியமாகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் செயல்திட்டம்:

பழுதடைந்த/துண்டிக்கப்பட்ட இணைப்புகளை 335 இடங்களில் செப்பனிடவும், மீள்கட்டமைப்பு செய்து மறுசீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழுதடைந்த/துண்டிக்கப்பட்ட இணைப்புகளை 335 இடங்களில் செப்பனிடவும், மீள்கட்டமைப்பு செய்து மறுசீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலைகளிலும் தெருக்களிலும் ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியில் மழைநீர் சேகரிப்பு மையங்கள் அமைத்திடவும் ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியில் வெள்ள வடிகால் துவாரங்கள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயன்கள்:

தகுந்த இடங்களில் மழை-வெள்ள வடிகால் இணைப்புகளைச் செப்பனிட்டுப் பொருத்துவதன் மூலம் மழைநீர் வடிகட்டப்பட்டு நீர்நிலைகளைச் சென்றடையும்.

பழுதடைந்த/துண்டிக்கப்பட்ட இணைப்புகளைச் செப்பனிட்டு, மீள்கட்டமைப்பு செய்வதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட/புதிய இணைப்புகள் சீராக, தடையின்றி செயல்படும் நிலை உருவாகும்.

நிகழ்வு ஆய்வு

5KL Water | Case Study: Los Angeles

The Five Thousand Pound Life: