Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

பிரதான சாலைகளை மறுசீரமைத்தல்

நகரின் பிரதான சாலைகள் மறுசீரமைப்புப் பணிகளின் முதல் கட்டமாக சாலைகளில் நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதைகளை மக்கள் வசதிக்கேற்ப கச்சிதமாக அமைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்கள், சாலையோர மரங்கள், சாலையோர இருக்கைகள், விற்பனை அங்காடிகள் ஆகியவற்றை விதிமுறைகளுக்கேற்ப அமைப்பதற்காகவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அறிவியல் ஆய்வுகளுக்குட்பட்ட வழிமுறைகளுக்கேற்ப இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பொதுச்சேவைப் பணிகளை நிறைவேற்றிடும் வகையில் நடைபாதைகளில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தைக் கட்டுப்படுத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் சாலையின் இருமருங்கிலும் நடைபாதைகளை வசதியாகப் பயன்படுத்தும் வகையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகரத்தில் மாபெரும் அகன்ற நடைபாதைகள்

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் சாலை நெரிசல்களைக் கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. பாதசாரிகளுக்கான நடைபாதைகளை சீரமைப்பது, அவற்றை அகலப்படுத்துவது மற்றும் எரிபொருள் பயன்பாடற்ற வாகனப்போக்குவரத்தை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் சாலை நெரிசல்களைத் தவிர்க்க பெரிதும் உதவும்.

மக்களின் வசதிக்கேற்ற தரம் மிகுந்த நடைபாதைகள்

இந்தியாவிலேயே பெருநகர சென்னை மாநகராட்சிதான் முதன்முதலாக எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்தை முதன்மைப் படுத்தும் பணிகளை செயல்படுத்தியுள்ளது. பாதசாரிகளுக்கான நடைபாதைகளை எவ்வித இடையூறும் இன்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் மறுசீரமைப்புத் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள்

வாகனங்களின் எரிபொருள் வாயுவினால் ஏற்படும் மாசுக்காற்று மற்றும் புவி வெப்பத்தைத் தணிக்க எரிபொருள்  பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்து பெரிதும் உதவுகிறது

வாகனங்களின் எரிபொருள் வாயுவினால் ஏற்படும் மாசுக்காற்று மற்றும் புவி வெப்பத்தைத் தணிக்க எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்து பெரிதும் உதவுகிறது

நடைப்பயிற்சியே அனைத்து வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சி

நடைப்பயிற்சியே அனைத்து வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சி

எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்து கரிமிலவாயுவினால்  உருவாகும் படிமத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது

எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்து கரிமிலவாயுவினால் உருவாகும் படிமத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது

மன அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றைத் தவிர்த்திட நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது

மன அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றைத் தவிர்த்திட நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது

நடந்து செல்வது சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவிட நமக்குக் கிடைத்திடும் ஒரு வாய்ப்பு

நடந்து செல்வது சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவிட நமக்குக் கிடைத்திடும் ஒரு வாய்ப்பு

மேன்மையான சுற்றுச்சூழல் உருவாக நம்மால் இயன்றது

சுற்றுச்சூழலின் தன்மை உயர்ந்திடவும் அதை நிலைப்படுத்திடவும் பெருநகர சென்னை மாநகராட்சி உயரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் உயர்ந்த தொழில்நுட்பச் செயல்பாடுகளின் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாட்டை நிலைநிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் பேருந்து வழிச்சாலைப் பிரிவு, நடைபாதைகளை சீரமைக்கும் பணித்திட்டத்தின் ஒரு அங்கமாக 23 சாலைகளில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
அகன்ற நடைபாதைகளை அமைத்திடும் திட்டப்பணியின் கீழ் பின்வரும் செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமைக்கப்படும் வேகத்தடைகள்

போக்குவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமைக்கப்படும் வேகத்தடைகள்

செடிகொடிகள் மற்றும் குப்பைத்தொட்டிகள் அமைப்பது

செடிகொடிகள் மற்றும் குப்பைத்தொட்டிகள் அமைப்பது

வண்ண நெகிழிக்  குமிழ்களை சாலைக் குறியீடுகளாய் அமைப்பது

வண்ண நெகிழிக் குமிழ்களை சாலைக் குறியீடுகளாய் அமைப்பது

இரவிலும் பகலாய் ஒளிவெள்ளம் பொழிந்திடும்  வகையில் எல்.இ.டி. விளக்குகள் அமைப்பது

இரவிலும் பகலாய் ஒளிவெள்ளம் பொழிந்திடும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் அமைப்பது

நிலத்தடிநீர் பெருகிடும் வகையில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைப்பது

நிலத்தடிநீர் பெருகிடும் வகையில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைப்பது

மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்களை மாற்றியமைப்பதன் மூலம் பாதசாரிகள் தடையின்றி நடக்க வழி செய்வது

மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்களை மாற்றியமைப்பதன் மூலம் பாதசாரிகள் தடையின்றி நடக்க வழி செய்வது

பிரதான சாலைகளை மறுசீரமைப்பதன் நோக்கம்:-

பிரதான சாலைகளை மறுசீரமைப்பதன் நோக்கம்:-

பிரதான சாலைகளை மறுசீரமைப்பதன் நோக்கம்:-

பெருமிதமாய் நடைபயிலுங்கள்

கரிமிலப் படிமம் கட்டுப்படுத்தப்படுகிறது

கரிமிலப் படிமம் கட்டுப்படுத்தப்படுகிறது

எரிபொருள் பயன்பாடற்ற இருசக்கர வாகனங்கள் சுற்றுசூழலில் மாசு படிவதைத் தடுக்க உதவுகின்றன

நடந்து செல்லுங்கள், நன்மை அடைந்திடுங்கள்

நடந்து செல்லுங்கள், நன்மை அடைந்திடுங்கள்

நலமான வாழ்வு முறைக்கு நன்மை பயக்கும் நடைப்பயிற்சி

 இயற்கையுடன் ஒன்றுதல்

இயற்கையுடன் ஒன்றுதல்

சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட நம்மால் இயன்ற பேருதவி

நிகழ்வு ஆய்வு

Road diets: designing a safer street

Reconfigure the lanes and the traffic will calm...

Camden Town - a pedestrian friendly street

Video produced as a part of a case study on Camden Walking Plan, London or The United Kingdom within the Eltis Urban Mobility Observatory,.....