Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

குறிக்கோள் & நோக்கம்

ஒரு சீர்மிகு பெரு நகரத்தின் உயரிய தன்மைக்கு உகந்த கட்டமைப்புகள், நவீன சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளுடன், மீள் உருவகச் செயல்பாடுகளை செவ்வனே நிறைவேற்றத்தக்க வகையில் சமூக, பொருளாதார சவால்களை தகுந்த முறையில் எதிர்கொள்ளத்தக்க இயற்பியல் தன்மையுடன் நிலையானதொரு வாழ்க்கை முறையை வழங்கக்கூடிய ஒரு உலகளாவிய கலாச்சார மையமாக சென்னை மாநகரத்தைத் திகழ வைப்பதே இத்திட்டப்பணியின் அடிப்படை நோக்கம்.

vision0

நகரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே மாநகர வளர்ச்சிக்கான முதன்மைத் தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு குழும நிறுவனங்களையும் தனிப்பட்ட முதலீட்டாளர்களையும் இத்திட்டப்பணியில் ஈடுபடுத்தும் வகையில் ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. சென்னை மாநகரின் கட்டமைப்பு தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடி, மக்களின் தேவைக்கேற்ற அளவில் ஈடு செய்ய முடியாத அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவை இதில் அடங்கும். எனினும், கடந்த பல வருடங்களில் இது போன்ற குறைபாடுகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இவற்றில் மூன்று தடங்களில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நெட்வொர்க் முக்கியமான சீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணித்திட்டங்களில் ஒன்றாகும். மெட்ரோ ரயில் நிலையங்கள் நகரின் பல்வேறு சிறு பகுதிகளையும் இணைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. மேலும் , NMT – Non Motorized Transport எனப்படும் சைக்கிள் பயணம் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. மக்கள் தாம் சென்று சேர வேண்டிய இடத்தை எளிதில் அடைவதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது.