- Log in to post comments
பெருநகர சென்னை மாநகரில் சோடியம் வேப்பர் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியமைக்கும் திட்டப்பணியை மேற்கொண்டு அதைத் திறன்பட நிறைவேற்றியுள்ளது பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரிவான சீர்மிகு நகர அமைப்பு.
சோடியம் வேப்பர் விளக்குகள் தேவையான வெளிச்சத்தை வழங்கினாலும் அவற்றைக் காட்டிலும் எல்.இ.டி. விளக்குகள் அதிக ஒளிவெள்ளத்தை வழங்குவதாலும், எல்.இ.டி. விளக்குகளின் பயன்பாட்டால் மின்சார உபயோகம் சிக்கனமாவதாலும் மாநகரின் அனைத்துப் பிரதான சாலைகளிலும் வீதிகளிலும் எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தும் பணியை பெருநகரச் சென்னை மாநகராட்சியின் பிரிவான சீர்மிகு நகர அமைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
எல்.இ.டி. விளக்குகள் 10 லட்ச மணிநேரம் செயல்படும் திறன் கொண்டவை என்று கணிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மின்சாரப் பயன்பாடு
சிக்கனமானதும் கூட.
சென்னை மாநகரமெங்கும் 1772 இடங்களில் சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு மாற்றாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்திட்டப்பணி நிறைவேற்றப்பட்டதன் பயனாக ஆண்டுக்கு ரூ 41,58,000 வரையிலான மதிப்பீட்டில் மின்சாரம் சேமிக்கப்படும்.
மணிக்கு 6,54,800 கிலோவாட்ஸ் வரை மின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும். இத்திட்டப்பணியின் செலவு மதிப்பீடு ரூ 3.44 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.