- Log in to post comments
சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்காக நீர் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நீர் இணைப்புகள் மூலம் நீர் இருப்பு மற்றும் பயன்படுத்தப்படும் நீரின் அளவைக் கண்காணிப்பதற்கும் கணக்கிடுவதற்கும் ஏதுவாக மீட்டர்கள் பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை நகரமெங்கும் வழங்கப்பட்டுள்ள நீர் இணைப்புகளில் மின்காந்த நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் (Electromagnetic flow meters) பொருத்தப்படும். ஒவ்வொரு நீர் இணைப்பிலும் நீரின் இருப்பு மற்றும் பயன்படுத்தப்படும் நீரின் அளவு பதிவாகும். பதிவாகும் நீர் இருப்பு மற்றும் பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப நீர் வழங்கப்படும். பயன்படுத்தப்படும் நீரின் அளவிற்கு ஏற்ப கட்டண விகிதங்கள் முறைப்படுத்தப்படும்.
இந்தத் திட்டப்பணியின் முதல் கட்டமாக 12,708 நீர் இணைப்புகளில் தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்படும். இதனால், மக்களுக்கு வழங்கப்படும் நீருக்கு வரி செலுத்தும் முறை மாற்றப்பட்டு இனி, நீர் பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் வரையறுக்கப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
சீர்மிகு சென்னை நகர அமைப்பின் சீரிய திட்டப்பணியின் மூலம் இனி சென்னை நகர்வாழ் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால மக்களுக்குத் தேவைப்படும் அளவுக்குக் குடிநீர் வழங்கப்படுவதுடன், நீர்க்கசிவு மற்றும் நீர் வீணடிப்பதைத் தவிர்க்க முடியும். நகர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நீர் வழங்குதலை சீரிய முறையில் செயல்படுத்துவதுடன் நடைமுறையில் இருந்த கட்டமைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் மறுசீரமைக்க முடியும்.
நீர் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள், நீர்த் தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொள்ளவும், அவற்றை மறுசீரமைத்து முறைப்படுத்தவும் தேவையான சீரிய நடவடிக்கைகளை சீர்மிகு சென்னை நகர அமைப்பு எடுத்து வருகிறது. நகரமெங்கும் நீர் வழங்குவதற்கான கட்டமைப்புகளை முறைப்படுத்துவதே இத்திட்டப்பணியின் நோக்கம். இத்திட்டப்பணியின் முக்கிய நோக்கங்கள்:
சீர்மிகு சென்னை நகர அமைப்பின் திட்டப்பணி நீர் வழங்கும் முறை மற்றும் நீர் ஆதாரங்கள் தொடர்பான பல்வேறு உறுதியான வழிமுறைகளை வகுத்துள்ளது.