- Log in to post comments
சென்னை ஸ்மார்ட் சிட்டி எனும் பெருநகர மேம்பாட்டுத் திட்டப்பணிகளின் ஒரு அங்கமாக 662 சென்னைப் பெருநகராட்சிக் கட்டிடங்களில் சூரிய சக்தி மேற்கூரைத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசுக்கட்டிடங்களிலும், அதாவது பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 1,378 கட்டிடங்களிலும் சூரிய மின்சக்தி மேற்கூரைத் தகடுகள் அமைக்கப்படும்.
மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் தகடுகள் மூலம் நாளொன்றுக்கு 12,000 முதல் 13,000 யூனிட்டுகள் வரை புதுப்பிக்கக்கூடிய மறுபயன்பாட்டு மின்சார உற்பத்தி செய்யப்படும். சென்னை நகரின் மொத்த மின் தேவையில் இதன் மூலம் 13% மின்சாரம் பெறமுடியும். மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் தகடுகள் மூலம் பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பகலிலும் இரவிலும் ஒவ்வொரு நாளும், ஏன், என்றென்றும், நகரத்துக்குத் தேவையான மின் உற்பத்தியை வழங்குகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியினால் நிறைவேற்றப்பட்ட இந்த மாபெரும் திட்டப்பணி சீர்மிகு சென்னை நகரப் பிரிவு அமைப்பின் மூலம் (Chennai Smart City Limited) 24.03 கோடி ரூபாய் அளவில் நிதியுதவி பெறப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை மின்சாரக் கட்டணச் செலவுகளை சேமிக்க முடியும்.
இத்திட்டப்பணியின் முக்கிய அம்சங்கள் :-
இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 1,378 கட்டிடங்களிலும் சூரிய மின்சக்தி மேற்கூரைத் தகடுகள் ரெஸ்கோ மாதிரி வடிவில் அமைக்கப்பட்டு, இந்தக் கட்டமைப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சீரிய முறையில் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். பெருநகரச் சென்னை மாநகராட்சிக் கட்டிடங்களுக்குத் தேவையான மின்சக்தியில் 80% இந்த சூரிய மின்சக்தி மேற்கூரைத் தகடுகளின் மூலம் பெறமுடியும்.
அணு (nuclear energy), நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு, போன்ற தொல்படிவ எரிபொருட்கள் (fossil fuels) மின் உற்பத்தி முறைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியைவிட சூரிய மின்சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்துக்கான உற்பத்திச் செலவு 20% குறைகிறது.