- Log in to post comments
மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் நவீன முறையில் மாற்றியமைக்கும் பணிகள் நிறைவேற்றப்படும்போது அவற்றின் சிறப்புப் பயன்பாடுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வதும் மிக அவசியம். இதைக் கருத்தில் கொண்டு சீர்மிகு சென்னை நகர அமைப்புப் பிரிவு நவீனக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம் மாநகரப் பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கும் அவர்கள் மூலம் மாணவச் செல்வங்களுக்கும் தகுந்த பயிற்சியளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பள்ளி வகுப்பறைகளில் மின்சாரம், மின்னணுப் பயிற்சிப் பலகைகள், இணையதளத் தொடர்பு மற்றும் மேசைகள், நாற்காலிகள் போன்ற அடிப்படைப் பொருட்களுடன் திறன்மிகு வகுப்பறைகளை உருவாக்கியுள்ளது. இந்தப்பணியைச் சிறந்த முறையில் செயலாக்க பெருநகர சென்னை மாநகராட்சி, முன்னணி மின்னணு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை மாநகராட்சிப் பள்ளிகளில் 28 திறன்மிகு வகுப்பறைகளை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. சீர்மிகு சென்னை நகர அமைப்பின் மூலமாக இத்திட்டப்பணிக்கான செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 28 வகுப்பறைகளில் மின்சாரம், மின்னணு ஒளிர் பயிற்சிப் பலகைகள், இணையதளத் தொடர்பு போன்ற நவீன கட்டமைப்புகளும் மேசைகள், நாற்காலிகள் போன்ற அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு மாணவச் செல்வங்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் சீரிய பணி செவ்வனே நடைபெற்று வருகிறது.
புதிய தலைமுறைக்கு சிறந்த பயிற்சிகளை அளிக்கும் நோக்கத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகளுடன் 28 திறன்மிகு வகுப்பறைகளை உருவாக்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, முன்னணி மின்னணு நிறுவனமான சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கு வசதியாக பின்வரும் சாதனங்கள் திறன்மிகு வகுப்பறைகளில் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை நகரில் பள்ளி மாணவர்களைப் பயிற்றுவிக்கும் முறையில் தொழில்நுட்ப உதவியுடன் சீர்மிகு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. நவீன பயிற்சி முறைகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் மாணவர்கள் சிறந்த கல்வியும் பயிற்சிகளும் பெற சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.