எங்களைப் பற்றி
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த நான்கு திட்டப்பணிகளை 2015 ஜூன் மாதம் துவக்கி வைத்தது. இவற்றில் ஒன்று, ‘ஸ்மார்ட் சிட்டி’. ’ஸ்மார்ட்’ என்ற ஆங்கிலச் சொல் துடிப்பு, வளமான சுற்றுச்சூழல், நலம், நிறைந்த வசதி, சுகாதாரம் போன்ற வளர்ச்சி நிலைகளை உள்ளடக்கிய ஒற்றைச் சொல்லாகும். மாநகர்வாழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிலையான, சுகாதாரமான சுற்றுச்சூழலுடன் இதற்கான பயன்பாட்டுச் செயல் வடிவில் (ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ்) வழங்கிடுவதே இத்திட்டத்தின் நோக்கம். தங்கள் அன்றாட வாழ்வில் மனதுக்கு உகந்த ஏற்புடைய வாழ்க்கைச் சூழலில் மக்கள் வாழ்ந்திட இது வகை செய்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியை திறன்பட பயன்படுத்துவதன் மூலம் உயரிய பொருளாதார முன்னேற்றம் காண்பதும் அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு நிலை அடைவதும்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின் குறிக்கோள். பின்தங்கிய பகுதிகள் உட்பட நகரின் ஒவ்வொரு பகுதியும் இத்தகைய சீரமைப்புத் திட்டப்பணிகளின் மூலம் புதுவடிவம் பெற்றுத் திகழும் வகையில் உள்நகரக் கட்டமைப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த புள்ளி விவரங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் அதன் மூலம் அடிப்படை வசதிகளையும் சேவைகளையும் பெறுவதற்கும் ஸ்மார்ட் சொல்யூஷன் செயல்திட்டம் பெரிதும் உறுதுணையாய் விளங்கிடும். வேலைவாய்ப்புகள் பெருகிடவும் வருவாய் உயர்ந்திடவும் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறந்து விளங்கிடவும், குறிப்பாக ஏழை எளியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்று மகிழ்ந்திடவும் இந்த முன்னேற்றத் திட்டங்கள் துணை நின்று ஒரு புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
முதல்கட்டமாக 20 ஸ்மார்ட் சிட்டிகளை நிர்மாணிக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரிசையில் சென்னை மாநகரம் 17வது இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் கண்ணோட்டம்
நிறுவன சட்டப்பிரிவுகளின் கீழ் (Companies Act 2013) சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிட்டட் ஒரு லிமிட்டட் (பொதுப்பங்கு) நிறுவனமாக ஜூலை 15, 2016 அன்று நிறுவப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுவது, மதிப்பீட்டுக்கான ஆய்வு மேற்கொள்வது, ஒப்புதல் வழங்குவது, நிதி ஒதுக்கீடு, செயல்திட்டம், நிர்வாகம், செயலாக்கம், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்வது போன்ற நடவடிக்கைகள் இந்த நிறுவனத்தின் அடிப்படைச் செயல்பாடுகளாகும். பெருநகராட்சியின் (GCC) ஆணையராகச் செயல்படும் நிறுவனத் தலைவரின் தலைமையில் ஏழு இயக்குனர்கள் செயல்படுகின்றனர். நிறுவன சட்ட விதிகளுக்கேற்ப நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் இயக்குனர்களைத் தேர்வு செய்கின்றனர். இந்தச் சிறப்புச் செயல்பாட்டுத் திட்டப் பணிக்குழுவின் செயல்களை (SPV) நிறைவேற்றுவதற்கான போதிய நிதி ஒதுக்கீடுகள் உரிய நேரத்தில் கிடைக்குமாறு செய்வது CSCL நிறுவனத்தின் பொறுப்பாகும். ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப் பணிகளுக்கான அரசு உதவித்தொகை மக்களுக்குப் பயன் தரும் அடிப்படைத் தேவைகள் மற்றும் உபகரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இப்பணிகளின் செயலாக்கத்திற்கு இணைப்பங்குதாரர்கள், பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள், பணிநிறைவு ஒப்பந்தங்கள் போன்ற முனைவுகள் மூலம் தேவைக்கேற்ப நிதி பெற ஆவன செய்தல் வேண்டும். சிறப்புச் செயல்பாட்டுத்திட்டப்பணிக் குழுவின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள்:
திட்டப்பணிகளையும் அவற்றின் தொழில்நுட்ப மதிப்பீடுகளையும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்தல்.
ஸ்மார்ட் சிட்டி தொடர்பான திட்ட நடவடிக்கைகளை சுதந்திரமாகச் செயல்படுத்துதல்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் (MoHUA) விதிமுறைகளுக்கேற்ப ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துதல்.
அடிப்படை தேவைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிடைக்குமாறு செய்தல்.
மூன்றாம் தரப்பினர் மற்றும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகளுக்கு ஏற்ப ஒப்புதல் அளித்து செயல்படுதல்.
கட்டுமானக் கொள்ளளவு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல்.
திறன் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தொடர்புகளை ஆக்கபூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தல்.
திட்டப்பணிகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு மற்றும் பணிச் செயலாக்கங்களை கருத்தாய்வு செய்து அவை தொடர்பான விவரங்களைச் சேகரித்தல். ஏனைய துறை சார்ந்த திட்டங்களின் நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்குதல்.
தரக்கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை கவனத்துடன் செயல்படுத்தி அவை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.
பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை கூட்டமைப்பாகவோ துணை அமைப்பாகவோ இணைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிச் செயல்திட்டங்களை நிறைவேற்ற ஆவன செய்தல்.
உரிய ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வகை செய்யும் ஏற்பாடுகளை மேற்கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சீரிய முறையில் நிறைவேற்றிட ஆவன செய்தல்.
நகர்ப்புற உள்ளமைப்புக் குழுமங்கள் நிர்ணயித்துள்ள பயன்பாட்டுக் கட்டணங்களை மட்டுமே வசூலிக்க ஆவன செய்தல்.
நகர்ப்புற உள்ளமைப்புக் குழுமங்கள் நிர்ணயித்துள்ள வரிகள் வசூலிக்கப்பட வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் நகர்ப்புற உள்ளமைப்புக் குழுமங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி தொடர்பாக நிர்ணயித்துள்ள ஏனைய பணிகளை நிறைவேற்றிட ஆவன செய்தல்.
பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை நகரின் தனிச்சிறப்பு 376 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. கடந்த 2014 செப்டம்பர் முதல் இயந்திரங்கள் அற்ற வாகனப் பயணக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் பாதசாரிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அத்திட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் சென்னை முதல் நகரமாகத் திகழ்கிறது. சென்னை நகரில் 5275 கிலோமீட்டர் நீள அளவில் நீர் விநியோக இணைப்புக் குழாய்களும் 3643 கிலோமீட்டர் நீள அளவில் கழிவுநீர் அகற்று இணைப்புக் குழாய்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக 10 கிலோமீட்டர் தூரப் பயணத்துக்கும் செட்ரோ போக்குவரத்துக் கழகச் சேவை மூலம் பல்வேறு தடங்களில் 4000 பேருந்துகளும் இயங்குகின்றன. நீர் சுத்திகரிப்புப் பணித்திட்டச் செயல்பாட்டுக்காக 100 MLD (ஒரு தினத்துக்கு 100 மில்லியன் லிட்டர்) அளவில் மாற்று நீர்நிலை ஆதாரங்களை உருவாக்கும் வகையில் உப்பு அகற்று ஆலை நிறுவப்பட்டுள்ளது. கைபேசி செயலிகள் மூலம் (GIS)பகுதிவாரியாக குப்பை அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் வகையிலும் குப்பைத் தொட்டிகளின் நிலை மற்றும் குப்பை அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையிலும் 2013ம் ஆண்டு முதல் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றதாக, குறிப்பாக மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் நகரமாக சென்னை மாநகரம் திகழ்கிறது. சென்னை மாநகரக் காவல் நகரவாசிகள் இணையதளப் படிவம் மூலம் புகார் அளிக்கவும், அவ்வாறு அளித்த புகார்களின் நிலை குறித்து அறிந்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர் கண்காணிப்புப் பணியில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. உபரி மின் பயன்பாடு 6290 மணிநேரத்திலிருந்து 4677 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடை தொடர்பான புகார்கள் 1 மணிநேரத்துக்குள்ளாகப் பரிசீலிக்கப்படும். மின் நுகர்வோருக்கான புதிய மின் இணைப்புச் சேவை வழங்குதல் 3 மணிநேரத்துக்குள்ளாகப் பரிசீலிக்கப்படும். மின் விநியோக மையம் (Transformer) பழுதடைந்தால் அது தொடர்பான புகார்கள் 24 மணிநேரத்துக்குள் பரிசீலிக்கப்படும்.