- Log in to post comments
தமிழ்நாடு மின்சார வாரியம், சீர்மிகு நகர அமைப்பின் மூலமாக, சீர்மிகு நகரத் திட்டப்பணிகளின் ஓர் திறன்மிகு செயல்பாட்டுத் திட்டமாக தானியங்கி மின்சார மீட்டர்களைப் பொருத்த உள்ளது. இந்த மீட்டர்கள் பன்முகத் திறன் மற்றும் பயன்பாடுகளை மக்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மின் உபயோக முறையை நவீனமயமாக்க பெருநகர சென்னை மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதற்கான தீர்வுகளை நிறைவேற்றி வருகிறது. தற்கால சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளுக்கு உகந்த வகையில் இந்தத் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தானியங்கி மின்சார மீட்டர்களைப் பொருத்தும் திட்டப்பணியினால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வர்த்தக மற்றும் மூலாதார மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் மேலும் திறன்மிகுந்ததாகத் திகழும்.
மின் உபயோக அளவுக்கான கட்டணங்களைக் கணக்கிடுதல், மின் உபயோகம் மற்றும் கட்டண விவரங்களை பதிவுசெய்தல், மின் இணைப்பு வழங்குதல், மின் இணைப்பு துண்டித்தல், நுகர்வோர் புகார்கள், மற்றும் மின்சார உபயோக அளவுக்கேற்ப கட்டணங்களைப் பதிவு செய்தல் போன்ற செயல்பாடுகள் எளிதாக்கப்படும்.
மின் உபயோக அளவுகளை கணக்கிடுதல் முறையிலான செலவினங்களைக் கட்டுப்படுத்த இயலும்.
மின்சார மீட்டர்களை சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் மாறாக மாற்றியமைக்க இனி எவராலும் முடியாது.
மின் உபயோக அளவுகள் இனி துல்லியமாகக் கணக்கிடப்படும்.
மின் உபயோகம் சார்ந்த அறிவிப்புகள், தகவல்கள் மற்றும் விவரங்கள் உடனடியாக வழங்கப்படும். புகார்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும்.