- Log in to post comments
சென்னை தி. நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் கடைகள் மற்றும் விற்பனையகங்களின் வாசலில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்த்து சாலையைச் சீரமைத்து பாதசாரிகளின் வசதிக்காக அகன்ற நடைபாதை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறன் கொண்டோர் மற்றும் அனைவரும் சுலபமாய் நடந்து செல்லவும், ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் பசியாறவும், போக்குவரத்து நெரிசல் போன்ற எவ்வித இடையூறுகளும் இன்றி சாலையைக் கடக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாநகர் சார்ந்த மக்களுக்கும் இது ஒரு விருப்பமான இடமாகத் திகழ்வதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாய் பெடஸ்ட்ரியன் ப்ளாசா விளங்கும் என்பது திண்ணம்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டை நிலைநிறுத்திடும் வகையில் எந்திர வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்தை ஊக்குவித்திடவும் பாதசாரிகளுக்கு வசதியாக நடைபாதைகளை சீரமைத்திடவும் சீர்மிகு நகரத் திட்டப்பணியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி முனைந்துள்ளது. இத்திட்டப்பணியின் முன்னுதாரணமாக விளங்குவது பெடஸ்ட்ரியன் ப்ளாசா.
சீரமைக்கப்படும் நடைபாதைகள் (நடைபெறுகின்ற பணிகள்)
மாசுக்கட்டுப்பாட்டை முதன்மைப்படுத்துவதே பெடஸ்ட்ரியன் ப்ளாசா திட்டப்பணியின் முக்கிய நோக்கம். எரிபொருள் பயன்பாடற்ற வாகனப்போக்குவரத்து மற்றும் நடந்து செல்வதை ஊக்குவிப்பதன் மூலம் இத்திட்டத்தைப் பெருமளவில் செயலாக்க முடியும் என்பது உறுதி.
இத்திட்டப்பணியின் பயன்பாடுகள்:
நடைப்பயிற்சி மேற்கொள்வோம், சென்னை மாநகர் சிறந்து விளங்கிட உதவிடுவோம்! நடைப்பயிற்சியே சிறந்த, செலவில்லாத உடற்பயிற்சி எனும் உண்மையை உணர்ந்து செயல்படுத்தப்பட்டதுதான் இந்த பெடஸ்ட்ரியன் ப்ளாசா எனும் மாபெரும் பணித்திட்டம். உடற்பயிற்சிக்காக நாம் பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. நடைபயில்வதே மிக எளிதானது, அதிக பயன் தரக்கூடியது. உடல்நலம், வெகு அருகில்!