- Log in to post comments
நகரின் பிரதான சாலைகள் மறுசீரமைப்புப் பணிகளின் முதல் கட்டமாக சாலைகளில் நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதைகளை மக்கள் வசதிக்கேற்ப கச்சிதமாக அமைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்கள், சாலையோர மரங்கள், சாலையோர இருக்கைகள், விற்பனை அங்காடிகள் ஆகியவற்றை விதிமுறைகளுக்கேற்ப அமைப்பதற்காகவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அறிவியல் ஆய்வுகளுக்குட்பட்ட வழிமுறைகளுக்கேற்ப இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பொதுச்சேவைப் பணிகளை நிறைவேற்றிடும் வகையில் நடைபாதைகளில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தைக் கட்டுப்படுத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் சாலையின் இருமருங்கிலும் நடைபாதைகளை வசதியாகப் பயன்படுத்தும் வகையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் சாலை நெரிசல்களைக் கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. பாதசாரிகளுக்கான நடைபாதைகளை சீரமைப்பது, அவற்றை அகலப்படுத்துவது மற்றும் எரிபொருள் பயன்பாடற்ற வாகனப்போக்குவரத்தை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் சாலை நெரிசல்களைத் தவிர்க்க பெரிதும் உதவும்.
இந்தியாவிலேயே பெருநகர சென்னை மாநகராட்சிதான் முதன்முதலாக எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்தை முதன்மைப் படுத்தும் பணிகளை செயல்படுத்தியுள்ளது. பாதசாரிகளுக்கான நடைபாதைகளை எவ்வித இடையூறும் இன்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் மறுசீரமைப்புத் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள்
சுற்றுச்சூழலின் தன்மை உயர்ந்திடவும் அதை நிலைப்படுத்திடவும் பெருநகர சென்னை மாநகராட்சி உயரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு ஆய்வுகள் மற்றும் உயர்ந்த தொழில்நுட்பச் செயல்பாடுகளின் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாட்டை நிலைநிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் பேருந்து வழிச்சாலைப் பிரிவு, நடைபாதைகளை சீரமைக்கும் பணித்திட்டத்தின் ஒரு அங்கமாக 23 சாலைகளில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
அகன்ற நடைபாதைகளை அமைத்திடும் திட்டப்பணியின் கீழ் பின்வரும் செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.