- Log in to post comments
நகர்வாழ் மக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, சாலைப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு முறைகளை மிக எளிய முறையில் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டதுதான் சாலைப் போக்குவரத்துப் பூங்கா.
நகரிலுள்ள சாலைகள் மற்றும் வீதிகளை எடுத்துக்காட்டாகச் சித்தரிக்கும் விதத்தில் உருவகப்படுத்தப்பட்ட இந்தப் பூங்காவில் குறிப்பிட்ட சந்திப்புகளில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் நாம் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு - குறிப்பாகக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
மேலும், மிதிவண்டி ஓட்டும்போதும், நடந்து செல்லும் போதும், சாலைகளைக் கடக்கும்போதும் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்துக் குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
48
பார்வையிட்ட மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை
3298
பார்வையிட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை
3267
மொத்த எண் பொது பார்வையாளர்கள்
6565
மொத்த பார்வையாளர்கள்
குழந்தைகள் எதையும் ஆழ்ந்த கவனத்துடன் துரிதமாகக் கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களுக்குக் கற்பித்தலே முறையாகும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளைத் தெளிவான முறையில் கற்பிப்பதன் மூலம் குழந்தைகள் அதைப்பற்றிய ஓர் அனுபவபூர்வமான அணுகுமுறையும் விழிப்புணர்வும் பெற்றுத் திகழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இந்தத் திட்டப்பணியின் பயன்பாடுகள்: :
குழந்தைகள் சாலை விதிகளை புரிந்துகொள்வதற்கேற்ற சூழல்
மரங்கள், செடி கொடிகள் நிறைந்த தூய்மையான சுற்றுச்சூழல்
குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற விரிவான நிலப்பரப்பு