திறன்மிகு தொழில்நுட்பம்
பெருநகர சென்னை மாநகர வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றிட பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரிவாக இயங்கும் சீர்மிகு சென்னை அமைப்பு மேற்கொண்டுள்ள பணிகள் தொடர்பான தீர்வுகளை எளிதாகவும் திறன் மிகுந்த வகையிலும் எடுத்திட பல்வேறு தொழில்நுட்ப முறைகள் கையாளப்படுகின்றன.
மக்கள் வாழ்வாதரத்தையும் வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு இத்திட்டப்பணிகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறைவேற்றிடவும் அடிப்படைத் தொழில் நுட்ப முறைகள் பெரிதும் உதவுகின்றன.
சென்னை நகரில் 28 மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் உள்ள வகுப்பறைகள் திறன்மிகு வகுப்பறைகளாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் திறன்மிகு கரும்பலகைகள், டேப்லட் கணினிகள், புறத் தட்டெழுத்துப் பலகைகள் (external keyboards) ஆகியவை புதிய, சீர்மிகு வடிவில் அமைத்து வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருமக்களும், பயிலும் மாணவச் செல்வங்களும் திறன்மிகு கல்வி முறையினால் சிறந்த பயன் பெற்றுத் திகழ அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கிடும் மக்கள் சேவை மற்றும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிடவும் அவை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் பத்து சேவைகள் அடங்கிய கைப்பேசி செயலி, பெருநகரச் சென்னை மாநகராட்சியின் சீர்மிகு சென்னை அமைப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்காக வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளது.
சீர்மிகு சென்னை அமைப்பின் திட்டப்பணிகளைக் கண்காணிக்கவும் செவ்வனே நிறைவேற்றிடவும் தொழில்நுட்ப முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை, அவசரநிலைக்கான தீர்வுகள், கழிவுப் பொருட்கள் அகற்றுவது மற்றும் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்து தொடர்பான கட்டமைப்புகளை மறுவடிவமைப்பு செய்து, துல்லியமான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.