கவன ஈர்ப்புப் பகுதிகள்
சுமார் 380 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரான்ஸிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகிய இருவரும் சந்திரகிரி நாயக்க மன்னரோடு பேச்சுவார்த்தை நடத்தி கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த அழகிய நகரத்தை தம் வசமாக்கிக்கொண்டனர். பின்னர் இந்தக் குடியிருப்பு நாளடைவில் ஒரு மாபெரும் கலாச்சார, வர்த்தக நகரமாக வளர்ந்து சென்னைப்பட்டினம் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் நகர வளர்ச்சியுடன் உள்கட்டமைப்புகள், போக்குவரத்து போன்றவற்றிற்கான தேவைகளும் அதிகமாயின.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மாநகரின் பல்வேறு குறைபாடுகளைக் களைந்து போக்குவரத்து மற்றும் மாநகரக் கட்டமைப்புப்பணிகளை சீரமைக்கும் முயற்சியில் போக்குவரத்து மற்றும் வளர்ச்சிப்பணிகளின் சீரமைப்புத் திட்டங்களுக்கான தீர்மானங்களை வரையறுக்கும் ITDP நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி சென்னையின் மக்கள் தொகை 9.8 மில்லியன். இடையறாத மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மக்களின் அன்றாடப் போக்குவரத்து வசதி முனைவுகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாயின. இந்த நிலைக்கான பல்வேறு காரணங்களில் பின் வரும் காரணங்களும் அடங்கும்:
- 2017ம் ஆண்டு சாலை விபத்தின் காரணமாக நேர்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 1300.
- இயந்திர வாகனப்பதிவுகள் 4.2 மில்லியன்
- 2000 பேருந்துகள் பற்றாக்குறையால் பயணிகள் பேருந்துகளில் அளவுக்கு மீறிய நெரிசல்
இந்தியாவில் முதன்முறையாக எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலமாக போக்குவரத்துத் திட்டங்களுக்கான நிதியில் 60% பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி பயன்படுத்துவோரின் வசதிக்காக ஒதுக்கப்பட்டது. இதுவரை 75 கிலோமீட்டர் தூரத்திற்கு தெருக்கள் பாதசாரிகளின் வசதிக்காக சீரமைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மேலும் 60 கிலோமீட்டர் தூரம் வரையில் தெருக்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மிதிவண்டிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 5000 மிதிவண்டிகளுடன் திறன் மிதிவண்டி பகிர்வுக்கான அமைப்பு செயல்பட்டு வருகின்றது
திறன் மிதிவண்டி பகிர்வு என்பது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கான ஒரு பொது போக்குவரத்து வசதி அமைப்பு. இதன்மூலம் மக்கள் எளியமுறையில் இதற்காக நிறுவப்பட்டுள்ள நிலையங்களிலிருந்து மிதிவண்டிகளைப் பெற்று பயன்படுத்தலாம். தங்களிடமுள்ள ஸ்மார்ட் கார்டு அல்லது மாற்று அடையாள அட்டைகளைக் கொண்டு ஒரு நிலையத்திலிருந்து மிதிவண்டியைப் பெற்று பயன்பாட்டிற்குப் பிறகு வேறு நிலையத்தில் அதை ஒப்படைக்கலாம். சென்னை மாநகராட்சி 3000 மிதிவண்டிகளுடன் 19 கிலோமீட்டர் சுற்றளவில் பயன்படுத்தும் வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையின் மக்கள் தொகை 4.6 மில்லியன், மேலும் நகர எல்லைக்கு உட்பட்ட பெருநகரப் பகுதிவாழ் மக்களையும் சேர்த்து மக்கள் தொகை சுமார் 9 மில்லியன்.
1. சராசரியாக ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் தொகையின் அடர்த்தி 26,900 பேர். பொது போக்குவரத்து - மாநகரப் பேருந்துகள், மின் தொடர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஆகியவை. இதைத்தவிர, மேலும் 45 கி.மீ. தூரத்திற்கான மெட்ரோ ரயில் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரப் பேருந்துகளின் தற்போதைய எண்ணிக்கை 3800. இவற்றில் பயணம் செய்வோர் நாளொன்றுக்கு சுமார் 52 லட்சம் பேர்.
2. தாம்பரம், திருநின்றவூர், வேளச்சேரி மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் புறநகர் மின் தொடர் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களின் தூரம் 123 கிலோ மீட்டர்.
3. இந்த வழித்தடங்களின் நெடுகில் சராசரியாக 300 மீட்டர் தூரத்திற்கு ஒரு ரயில் நிலையம் என்ற விகிதத்தில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4. மிதிவண்டிகள் களவாடப்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் மொத்தமாகவோ அல்லது உதிரி பாகங்களாகவோ விற்பனை செய்ய முடியாத வகையிலும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.
5. இந்தத் திறன் மிதிவண்டிகளை ஊழியர்கள் உதவியின்றி எடுத்து ஓட்டிச்செல்லும் வகையிலும் பயன்பாட்டிற்குப் பின் நிறுத்தும் வகையிலும் முழுமையான தானியங்கி பூட்டு வசதி தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
6. ரேடியோ அலைவரிசை நுண் கருவிகள் மூலம் மிதிவண்டிகள் எடுப்பது, ஒப்படைப்பது, பயன்பாட்டாளரின் அடையாளக் குறிப்புகள் போன்ற செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
7. மறு பயன்பாட்டுக்கு உதவும் வகையில் GPRS எனப்படும் இடம் கண்டறியும் செயலி மூலம் மிதிவண்டிகளின் போக்குவரத்து, அவை தற்போது உள்ள இடம் போன்ற தகவல்கள் கண்டறியப்படுகின்றன.
8. இணையதளம், கைபேசி மற்றும் திறன் மிதிவண்டி நிலைய சாதனங்கள் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பயனீட்டாளர் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
9. மிதிவண்டிகள் மற்றும் நிலையங்களில் விளம்பரம் செய்வதற்கான இடம் வழங்கப்படும். இது, ஒப்பந்ததாரர் கூடுதல் வருமானம் பெற உதவும்.
10. குறைந்த தூரப் பயணத்திற்கு சலுகைகள் பெற உதவும் வகையில் கட்டண விகிதங்கள் இருப்பதால் ஒரு நாளில் ஒரு மிதிவண்டி அதிக முறை பயன்படும் வாய்ப்புகள் உள்ளது.
வர்த்தகம் சார்ந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதுடன் நகரத்தின் முக்கிய இடங்களிலும் சாலையோரங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதில் உள்ள பிரச்சினைகளைக் களைவதையும் முதன்மை நடவடிக்கைகளாக இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தமிழ் நாடு நகர உள்கட்டமைப்பு மற்றும் நிதி நிர்வாக நிறுவனம் (Tamil Nadu Infrastructure Fund Management Company) சென்னை திறன்மிகு நகர அமைப்பு (CSCL) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) ஒப்புதலுடன் நிதி ஒதுக்கீடு மற்றும் வருவாய் பகிர்வு போன்றவை தொடர்பான முன் வரைவு ஆவணங்களை தயார் செய்யும்.
குறிப்பிட்ட அளவுள்ள இடத்தை முழு பயன்பாட்டுக்கு உகந்த முறையில் பயன்படுத்தும் வகையில் பல அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. பயன்படுத்தப்படாத நிலங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி வசமுள்ள இடங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களைப் பராமரிக்கவும் அவற்றின் மூலம் வருவாய் ஈட்டவும் இந்நிறுவனம் ஆவன செய்யும். நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை வாகன நிறுத்த மையங்களாக மாற்ற அரசு திட்டமிடுவதாகத் தெரிகிறது.
அரசு உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் புடாபெஸ்ட் நகருக்கு அரசு சார்பாக சென்று வந்த பின்னர், வாகன நிறுத்தங்களை நிர்வகிப்பதற்கென்று ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தும் திட்டம் உருவானது. புடாபெஸ்ட் நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள், தெருக்கள் போன்ற இடங்களில் சுரங்க வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்ட விதத்தையும் அதன் கட்டமைப்பு விவரங்களையும் சமர்ப்பித்தது.
புடாபெஸ்ட் நகரின் வாகன நிறுத்த மையங்களின் சிறப்புக் கூறுகள்:
- வாகனங்களை நிறுத்தும் கால அளவிற்கேற்ப கட்டண விகிதங்கள்
- வாகனக் கட்டணங்களைச் செலுத்த ஆறு விருப்பத் தேர்வு முறைகள் (க்ரெடிட் கார்டு, ப்ரிபெய்ட் பார்க்கிங் கார்டு மற்றும்
- நேரடியாகப் பணம் செலுத்துதல் போன்றவை உட்பட)
- முக்கிய வர்த்தக மையங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் முறை
அதிகத் திறனுள்ள பொதுப் பயணத் தீர்வுகள் மூலம் மக்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்வது சாத்தியம் என்றாலும் சென்றடைய வேண்டிய இடத்துக்கான தொடர்பு எனப்படும் Last-mile connectivity பயண வசதி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பது மிகவும் அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு பொது மிதிவண்டி பகிர்வு Public Bicycle Sharing (PBS) என்ற சேவை தொடங்கப்பட்டது. இச்சேவைக்கென்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பயன்பாட்டாளர் ஸ்மார்ட் கார்டு மூலம் ஒரு மையத்திலிருந்து மிதிவண்டியை எடுத்துப் பயன்படுத்தி வேறு மையத்தில் அதை ஒப்படைக்கக்கூடிய வகையில் செயல்படும் இந்தச் சேவை இந்திய நகரங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
பாதசாரிகளுக்கான தெருக்கள்: தி.நகரில் 23 தெருக்கள் மறுவடிவமைக்கப்பட்டன. இவற்றில் நீள் நடைபாதைகளும், இருக்கைகளும், எல்.இ.டி. விளக்குகளும், வாகனத்தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
-
பிரதான சாலைகள் மறுவடிவமைப்பு: எந்திரமற்ற வாகனப் போக்குவரத்துக் கொள்கையைக் கருத்தில் கொண்டு சீர்மிகு நகரத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சென்னை சீர்மிகு நகரத்திட்டப் பிரிவு பிரதான சாலைகளையும் வர்த்தகப் பகுதிகளையும் (market areas) மறுசீரமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முதல் கட்டமாக தி. நகரிலுள்ள ஜி.என். சாலை, வெங்கடநாராயணா சாலை போன்ற இடங்களில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
பெடஸ்ட்ரியன் ப்ளாசா: தி நகரிலுள்ள பாண்டி பஜார் அடர்ந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து போவதுண்டு. மக்கள் வசதியை முன்னிட்டு பாண்டி பஜார் பகுதியை சீர்படுத்தி சாலையின் இருமருங்கிலும் நடைபாதையை விரிவு படுத்தும் திட்டம் துரிதமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஷாப்பிங் செய்ய (பொருட்கள் வாங்க) வரும் மக்களுக்கு இந்த மாற்றம் ஓர் புதிய அனுபவத்தை வழங்கிடும். பெடஸ்ட்ரியன் ப்ளாசா எனப்படும் இந்த அகன்ற நடைபாதைப் பகுதி சாலையின் இருமருங்கிலும் மரங்களுடனும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சாலையோர இருக்கைகள் மற்றும் அலங்கார நீரூற்றுகளுடனும் எழிலாய்க் காட்சியளிக்கும்.
பல அடுக்கு கார் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடவும் வாகனங்களை நிறுத்துவதை சுலபமாக்கிடும் வகையிலும் தி.நகர் பகுதியில் பல அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.
வாகன நிறுத்த மேலாண்மை கட்டமைப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி நகரெங்கும் வாகன நிறுத்த மேலாண்மை கட்டமைப்பை அமைக்கும் திட்டத்தை செயலாக்கி வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களின் பயன்பாடுகளை திறனுள்ளதாக மாற்றி அமைப்பது, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதில் ஒழுங்குமுறை மற்றும் விதிகள், கட்டுப்பாடுகளுக்குப் புறம்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் வாகன நிறுத்த மேலாண்மை கட்டமைப்பு மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
மிதிவண்டி பகிர்வு: நகரெங்கும் பல இடங்களில் மிதிவண்டி பகிர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் நியாயமான கட்டணங்களில் வாடகைக்கு மிதிவண்டி பெற்று பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைவதுடன் பசுமைச் சுற்று சூழல் மற்றும் நலமான வாழ்வு முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கவும் இத்திட்டம் பெரிதும் உதவிடும்.
மிதிவண்டிப் பாதை: அனைவரும், குறிப்பாக மிதிவண்டி பயன்படுத்துவோருக்குப் பெரிதும் உதவும் வகையில் நகரின் சாலைகளில் 17 கி.மீ. தூரத்திற்கு பிரத்தியேகமாக மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. குறைந்த தூரத்திற்கு மிதிவண்டி பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
திறன்மிகு போக்குவரத்து மேலாண்மைக் கட்டமைப்பு: இந்தச் செயல்திட்டம் இரண்டு கட்டமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
-
திறன்மிகு சாலைப் போக்குவரத்து மேலாண்மை
-
திறன்மிகு வாகனப் போக்குவரத்து மேலாண்மை
சாலைப் போக்குவரத்து மேலாண்மை: சூழல் மற்றும் தேவைக்கேற்ற வகையில் மாற்றியமைக்கக்கூடிய கட்டமைப்பு. ஒவ்வொரு சாலைச் சந்திப்பிலும் போக்குவரத்து சிக்னல் ஒழுங்குமுறைத் திட்டங்களை மேம்படுத்துதல்.
வாகனப் போக்குவரத்து மேலாண்மை: பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வசதிகள், வாகனப் போக்குவரத்தைக் கண்காணிப்பது, பயணிகளுக்கான தகவல் மையம், நிலையான பேருந்து போக்குவரத்து வசதி, ஆகிய செயல்பாடுகளை மேம்படுத்துதல்
நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்:
-
எந்திரமற்ற வாகனப்போக்குவரத்து முறையை முன்னிலைப்படுத்தும் விதமாக 80% பேருந்துத் தடங்களில் தொடர் நடைபாதை அமைப்பது
-
பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி பயன்படுத்துவோருக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் நகரெங்கும் பிரத்தியேக நடைபாதை மற்றும் மிதிவண்டித் தடங்கள் அமைப்பது
-
நகரப் போக்குவரத்துத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 60% எந்திரமற்ற (எரிபொருள் பயன்பாடற்ற) வாகனங்கள் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் பயன்படுத்துவது
-
பொதுத்துறை (பேருந்து) பயணம் மற்றும் எந்திரமற்ற (எரிபொருளற்ற) வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்துவது.
-
திறன்மிகு போக்குவரத்து மேலாண்மைத் திட்டங்கள் மூலம் திறன் மிகு சிக்னல் கட்டமைப்பு, பயணிகள் தகவல் மையம், தொடர்ந்த, நிலையான போக்குவரத்து போன்ற வசதிகளை மேம்படுத்துவது.
நகரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மக்களை நேரிடையாகச் சந்தித்து அவர்களின் கருத்துகள், குறைகளைக் கேட்டறிந்து நகர் சார்ந்த அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவது. நேரிடையாகவும் ஆன்லைன் மூலமாகவும் தகவல் தொடர்புகளை முன்னிலைப்படுத்துவது. மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப நகராட்சிப் பணிகள் மற்றும் சேவைகளை செயல்படுத்துவது. வரலாறு மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை சார்ந்த இடங்களை பாதுகாத்துப் பராமரிப்பது. சரித்திரப் புகழ் மற்றும் கலாச்சாரப் பெருமை வாய்ந்த இடங்களை மேம்படுத்துவது, சிறந்த முறையில் பராமரிப்பது. பொது இடங்கள், திறந்த வெளிகள், பொது உபயோக இடங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகிய அடையாளச் சின்னங்களை பண்டிகைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக மக்கள் பயன்படுத்தும் வகையில் சிறந்த முறையில் பராமரிப்பது.
அறிவியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் திறன் மிகுந்த ஆட்சியமைப்பு, சிறப்பான மேலாண்மை குறித்த தகவல்களைத் தெளிவாகப் பகிர்வதே இந்த அமைப்பின் தலையாய நோக்கம். பெருநகர சென்னை மாநகராட்சியின் திறன் மிகு பணித்திட்டங்களை நவீன மின்னணு பயன்பாடுகள் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் பகிர்வதன் மூலம் அத்திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நகராட்சியின் அணுகுமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பகிர்வு முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறந்த கட்டமைப்பை வடிவமைத்து அதன் மூலம் சீர்மிகு நகரத் திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் திறன்மிகு மேலாண்மை பெரும்பங்கு வகிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நகரமயமாக்குதல் வளர்ச்சி விகிதத்தின் அளவு (2.4%) ஆகும். இது உலகளாவிய நகரமயமாக்குதல் வளர்ச்சியைக் காட்டிலும் (2.1%) அதிகம். இந்தியாவில் 2040ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மேலும் 404 மில்லியன் மக்கள் நகரச் சூழலில் வாழும் நிலையை உருவாக்கத்தக்க வகையில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரச்சூழல் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு வழி வகுப்பதுடன் பல்வேறு சவால்களையும் முன் வைக்கிறது. சமூக, கலாச்சார, பொருளாதார ரீதியில் வேறு பட்டிருக்கும் இந்திய நகரங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கத்துடன் வாழ்வுநிலை நியதிகளை மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் எளிதாக வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் / தக்க ஆதாரங்களுடன் உருவாக்கப்படும் திட்டப்பணிகள் / அனைத்து நகரங்களுக்கும் இடையேயான ஒப்பீடு.
மேற்கூறிய பணிகளைச் செயல்படுத்துவதன் மூலம் மக்கள் அடையக்கூடிய பயன்கள்:
- திறன்மிகு வகுப்பறைகள்: சிறந்த முறையில் சீர்மிகு கல்விமுறையைக் கற்பிக்கும் வகையில் ஆசிரியப் பெருமக்களுக்கும், கற்றுக்கொள்ளும் வகையில் மாணவச் செல்வங்களுக்கும் திறன்மிகு கரும்பலகை, மடிக்கணினிகள், தனித் தட்டச்சுப் பலகைகள் (external keyboards) ஆகிய சாதனங்கள் நகரமெங்கும் மாநகராட்சிப் பள்ளிகளில் 28 வகுப்பறைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
- நம்ம சென்னை செயலி: 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி சேவைகள் தொடர்பான விவரங்களை மக்கள் கேட்டறியவும், புகார்களைப் பதிவு செய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரே செயலி.
- டிஜிட்டல் அனுபவ மையம்: சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் தொடர்பான அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிந்து கொள்ள உதவும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மையம்.
- ஒருங்கிணைக்கப்பட்ட உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையம்: பேரிடர் தடுப்பு மேலாண்மை, அவசரநிலை மேலாண்மை, கழிவு மேலாண்மை முதலான அரசு சார்ந்த நலம் மற்றும் பாதுகாப்புச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் மையம்.
- திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை கட்டமைப்பு: சாலை போக்குவரத்து, சாலை நெரிசல் போன்ற அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உயரிய தொழில்நுட்ப முறைகளை (Hi-tech system) வடிவமைப்பது. திறன் மிகு சிக்னல் கட்டமைப்பு, பயணிகள் தகவல் மையம், தொடர்ந்த, நிலையான போக்குவரத்து போன்ற வசதிகளை மேம்படுத்துவது.
- வரைபடத் தொழில்நுட்பப் பயன்பாடு (GIS): மின்னணு வரைபடம் மற்றும் புவியியல் விவரங்கள் வாயிலாக திட்டப்பணிகள் சார்ந்த கணிப்புகள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைப்பது.
ஆய்வு செய்து முறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள்:
- சென்னை மாநகரை வாழ்வதற்கேற்ற அனைத்துத் தகுதிகள் கொண்ட உலகின் தலைசிறந்த நகரமாக மாற்றியமைப்பது.
- மக்கள் நம்பிக்கைக்குகந்த ஆற்றல் மிகுந்த சமூக சார்புள்ள தளங்களை வழங்குவது.
- பேரிடர் மேலாண்மை முதல் மக்கள் குறைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், அவசரநிலை தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் மின்னணு மேலாண்மைக் கட்டமைப்பை ஏற்படுத்துவது.
நம் வீட்டுத் தோட்டத்திலோ, ஒரு பூங்காவிலோ நடக்கும் போதும் ஒரு கோவில் குளத்தின் படிக்கட்டில் உட்காரும்போதும் ஒரு அமைதியான உணர்வு நம்மை ஆட்கொள்வது இயல்பு. ரம்மியமான இயற்கைச் சூழலில் இதுபோன்ற இடங்கள் முழுமை பெறுகின்றன. புறநகர் பகுதிகள், கிராமியச் சூழலுள்ள இடங்கள், நகரச் சந்தடியில் அமைந்துள்ள இடங்கள் எதுவாயினும் இயற்கை எழிலின் சூழலில் அமையப் பெற்றிருந்தால் உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்ததாய் விளங்கித் தனித்துவம் பெறுகின்றன.
“பூங்காக்கள் பல்வேறு பயன்களை நல்குவதுடன் இயற்கை வனப்புள்ள இடங்களாகவும் திகழ்கின்றன. நகரெங்கும் ஓர் இனிய சூழல் உருவாகி நிலைத்திட இதுபோன்ற பூங்க்காக்கள் பெரிதும் உதவுகின்றன” என்கிறார் ரவிகுமார் அசோஸியேட்ஸின் கட்டிடக் கலைஞர் ரவிகுமார் நாராயண்.
சாந்தோம் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கான முன்மாதிரிப் பூங்காவாக மாற்றியமைத்துள்ளது பூங்கா பிரிவு. இந்தப் பூங்கா 1500 சதுர மீட்டரில் சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு மையமாகவும் திகழும். இந்தப் பூங்காவின் தள அமைப்பு தொடு உணர்வுச் சாதனங்கள் மூலம் தனிக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்திடவும் விழிப்புணர்வை உருவாக்கிடவும் பெரிதும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2015 வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவாக ஒரு சீரிய கட்டமைப்பற்ற நகரத்தில் வாழும் அனுபவத்தை மக்கள் அடைந்தார்கள். நகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்தபோது, பல நீர்நிலைகள் அழிந்தன. நகரத்தின் தற்போதைய கட்டமைப்பை மாற்றமுடியாதெனினும், தொடர் மழை வழங்கும் நீர் பெருக்கை நமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் வழிகள் உள்ளன. இத்திட்டத்தை நிறைவேற்ற இயற்கையான வழிமுறைகளும், தொழில்நுட்பம் சார்ந்த வழிமுறைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை பொறியாளர்கள், சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இதற்கான தீர்வுகளைக் கண்டு அது தொடர்பான நடவடிக்கைகள் செயலாக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் சென்னை மாநகரம் வெள்ளத்தினால் பாதிப்படையாத வகையிலும் நீர் ஆதாரங்கள் வளமாக நிலைக்கும் வகையிலும் திகழ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வெள்ள நீர் வடிகால் கட்டமைப்புகள் மறு சீரமைப்பு
- தாங்குச் சுவர்கள் கட்டுதல் மற்றும் மணல் மூட்டைகள் பயன்படுத்துதல்
- முன்னெச்சரிக்கை ஆய்வுக்குப் பிறகு முக்கிய ஏரிகளிலிருந்து நீரை வெளியேற்றுதல்
வளர்ச்சிக்கு இணையாக வர்த்தகம் மற்றும் குடியிருப்பு சார்ந்த கட்டிடங்கள் பெருகினாலும் இயற்கை சூழ்ந்த இடங்களும் சரிசமமாகப் பராமரிக்கப்படுவதுதான் நகரச் சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும். நகர வளர்ச்சிக்கு ஈடாக இயற்கைச் சுற்றுசூழலைப் பராமரிப்பது கடினம்தான். உலகெங்கும் நகரங்களில் நெரிசலும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடிதலும் அதிகரித்து வருகின்றன. பசுமை சூழல் உருவாக்கத் திட்டங்களினால் இதுபோன்ற பின்னடைவுகளிலிருந்து நகரங்களைப் பாதுகாக்க வழி பிறக்கும்.
மேற்கூறியவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள்:
- பசுமை வெளிகளை மறு சீரமைப்பது: தி. நகர் பகுதியில் 8 பூங்காக்கள் பசுமையாகவும் வளம் நிறைந்த சூழலில் திகழும் வகையிலும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன.
- சென்ஸரி பூங்கா: மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பூங்கா.
- சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பயிற்சி பூங்கா: சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து குழந்தைகள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கிட வடிவமைக்கப்பட்டது.
- நீர்நிலைகள் மீட்பு, மறுசீரமைப்பு: கோவில் குளங்கள் உட்பட இதுவரை 210 நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
- படர் பூங்காக்கள்: மேம்பாலங்களைத் தாங்கும் தூண்களில் செடி கொடிகளைப் படரவிடுவதன் மூலம் சுற்றுச்சூழலில் போக்குவரத்தினால் ஏற்படும் வெப்பத்தைக் குறைத்து சமநிலை உருவாக்கும் செயல்திட்டம்.
- சென்னை நகர்வாழ் மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பொது இடங்களை உருவாக்கி சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவது.
- நகரமெங்கும் சுற்றுசூழல் மேம்படும் வகையிலும், காற்று, நீர், நிலம் போன்ற வாழ்வாதாரங்கள் வளமாய்த் திகழும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது.
- நகரமெங்கும் நீர்நிலைகளை மறுசீரமைத்து நிலத்தடிநீர் வளம் பெறவும், மழை நீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் மறுசுழற்சித் திட்டங்கள் முழுமையாகச் செயல்படவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது.
- சுற்றுச்சூழல் மாசு, நிலப்பரப்புகளில் குப்பைக்கூளங்கள் நிரம்புதல் ஆகிய இடர்பாடுகளை எதிர்கொள்ளும் விதமாக திடக்கழிவு மேலாண்மை மேம்பாட்டுத்திட்டம் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டம் மூலம் தீர்வு காண்பது.
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
- பெருநகர சென்னை மாநகராட்சி நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நீர் ஊர்தி நிரப்பு மையங்களுக்கான மீட்டர்கள்: சென்னை நகரில் 191 இடங்களில் நீர் ஊர்தி நிரப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 மையங்களில் ஸ்மார்ட் கார்ட் அடிப்படையில் ஆன்லைன் கண்காணிப்பு முறை அமலில் உள்ளது.
- அதிக அளவில் நீர் வழங்கலுக்கான மின்காந்த மீட்டர்கள்: குழாய்கள் மூலம் நீர் நிரப்பும் மையங்கள் மற்றும் நகரத்தின் முக்கிய நீர்தேக்கங்களில் எடுக்கப்படும் நீர் மற்றும் விநியோகிக்கப்படும் நீரின் அளவு கணக்கிடுவதற்கும் கண்காணிக்கப்படுவதற்காகவும் 251 மின்னணு கணிப்புக் கருவிகள் (electronic flow meters) பொருத்தப்பட்டுள்ளன.
- இணைப்புகள் அற்ற இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகளை அமைப்பது: சாலைகளில் வெள்ளப்பெருக்கைத் தவிர்த்திடும் வகையில் 335 இடங்களில் இணைப்புகள் அற்ற இடங்களிலும் இணைப்புகள் பழுதடைந்த இடங்களிலும் வடிகால் இணைப்புகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் 30 மீட்டர் இடைவெளியில் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தி.நகரில் 24/7 நீர் வழங்கல் திட்டம்: தி.நகரில் 19 பகுதிகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு நீர் வழங்கல் திட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் 30% இணைப்புகளை புதுப்பிக்கவும் நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் அனைத்து இணைப்புகளிலும் பொருத்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- திறன் மிகு நுகர்வோர் வசதிக்காக மின்காந்த மீட்டர்கள்: பெருநகர சென்னை மாநகராட்சி நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் திட்டப்பணிகளில் ஒன்றாக நீர் பயன்பாட்டு அளவை கணிக்கும் தானியங்கி மீட்டர்களை (Automatic meter reading) பொருத்தும் பணி இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல் நிலைத் திட்டத்தின் மூலம் 12,708 குடியிருப்புகளில் தானியங்கி மீட்டர்கள் AMR (Automatic meter reading) பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.
-
வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் (135 LPCD) என்ற விகிதத்தில் நீர் வழங்கப்படுவது.
-
100% தரத்தில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் 24/7 தடையற்று நீர் வழங்கப்பட வேண்டும்.
-
வெள்ளம் ஏற்படாமலும் மழைநீர் முழுமையாகப் பயன்படவும் நடவடிக்கைகள் எடுப்பது.
-
நீர் அழுத்தம், ஓட்டம், தரம் ஆகியவற்றை 100% திறனுடன் கண்காணிப்பது.
-
நகரில் எங்கும் மின்தடை ஏற்படாமல் கவனிப்பது
-
மின்தடை மொத்தமாக 6,920 மணிநேரத்திலிருந்து 4,677 மணிநேரமாகக் குறைந்துள்ளது (2012)
-
மின்தடை குறித்த புகார்கள் சராசரியாக ஒரு மணிநேரத்துக்குள் கவனிக்கப்படுகின்றன.
-
நுகர்வோருக்கான புதிய மின் இணைப்பு 3 மணிநேரத்தில் வழங்கப்படுகிறது.
-
ட்ரான்ஸ்ஃபார்மர் பழுதடைந்தால் 24 மணிநேரத்தில் மீண்டும் பொருத்தப்படுகிறது.
-
2015 முதல் 55 திறன் மிகு மீட்டர்கள் (Smart Meters) பொருத்தப்பட்டுள்ளன.
-
மறுசீரமைக்கப்பட்ட விரைவான மின் உற்பத்தி பணித்திட்டம் (Restructured Accelerated Power Development and Reforms Programme - R-APDRP) நிறைவேற்றப்பட்டதனால், மொத்த தொழில்நுட்ப, வர்த்தக இழப்பு (AT&C losses) 17.61% லிருந்து 15% ஆகக் குறைந்துள்ளது.
-
புதுப்பிக்கப்படக்கூடிய மின் ஆற்றல் (Renewable Energy) சாதனங்கள் உற்பத்தித் திறன்:
-
மேற்கூரை சூரியசக்தி (Rooftop Solar) = 358.26MW; Biomass = 230MW (முழுக்கொள்ளளவு)
கரும்புச் சக்கை அடிப்படையில் இணை உற்பத்தி (Bagasse based Cogen) = 659.4MW; Wind = 7,498.55 MW, ஆதாரம்: தமிழ்நாடு மின்வாரியம்
எண்ணெய் மற்றும் படிம எரிபொருள் விலையேற்றம், படிம எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு இடர்கள் இருந்தாலும் மின் ஆற்றலுக்கான தேவை கூடிக்கொண்டு போவது கண்கூடு. மின் தேவையை பூர்த்திசெய்வதற்காக படிம எரிபொருள் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் கார்பன் எரிவாயு வெளிப்பட்டு சுற்றுசூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டன.
பருவநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட விளைவுகளை ஈடுசெய்வதற்காக புதுப்பிக்கப்படக்கூடிய மின் ஆற்றல் உற்பத்திக்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தத் தொடங்கியது. மழைநீர் சேகரிப்புத் திட்டம் போன்று இத்திட்டத்தையும் மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய திட்டமாக மாற்ற அரசு முடிவுசெய்துள்ளது.
காற்று, சூரிய ஒளி, அணுமின்சக்தி, உடற்கழிவு, நீரோட்டம் போன்ற இயற்கை வளங்கள், நகராட்சி மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவையும் புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் உற்பத்திக்கு பயன்படும் வகையில் மறுசுழற்சி செய்யப்படும்.
மின் கட்டமைப்பு மற்றும் மின்னூட்டத்துக்கும் தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கும் புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் பெரிதும் உதவியாக அமைந்திடும்
மத்திய அரசின் பணமற்ற பரிவர்த்தனை முறைகளைப் போன்று தமிழ்நாடு அரசு பன்முகப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ‘ஸ்மார்ட் கார்ட்’ முறையை அறிமுகப்படுத்த உள்ளது. பேருந்துப் பயணம், மின் கட்டணம் மற்றும் மாநகராட்சி வரிகள் போன்ற கட்டணங்களை சுலபமாகச் செலுத்த இந்த ஸ்மார் கார்டை பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் கார்ட் பயன்பாடு மற்றும் அதன் அவசியம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி அவர்கள் சட்டசபைக் கூட்டத்தில் விளக்கிக் கூறினார்.
அரசாங்கக் கட்டிடங்களில் சூரியசக்தி மேற்கூரை: அனைத்து அரசாங்கக் கட்டிடங்களிலும் சூரியசக்தி மேற்கூரை பொருத்தப்படும். இதனால் பெறப்படும் புதுப்பிக்கப்படக்கூடிய மின்சக்தி மூலம் ஆண்டுக்கு ரூ 1.7 கோடி சேமிக்கப்படுகிறது.
சோடியம் வேப்பர் விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல்: தி.நகர் பகுதியில் 1772 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ 9.6 கோடி சேமிக்கப்படுகிறது.
கண்ணம்மா பேட்டை மயானம் மறுசீரமைப்பு: கண்ணம்மா பேட்டை மயானம் மறுசீரமைக்கப்பட்டதால் சுத்தம், சுகாதாரம் நிறைந்த சூழல் நிலவுகிறது.
தி.நகர் பகுதியில் ஸ்மார்ட் மீட்டர்கள்: மின் உபயோகத்தைக் கணக்கிடும் வகையில் தானியங்கி மீட்டர்கள் தி.நகர் பகுதியில் பொருத்தப்பட உள்ளன.
நீர்த்தாவரங்களை மறுசுழற்சிக்குப் பயன்படுத்துதல்: குறிப்பிட்ட நிலங்களில் நாளுக்கு 5 டன் வீதம் நீர்த்தாவரங்களை வளர்த்து அதை அறுவடை செய்து மறுசுழற்சிக்கு உட்படுத்தி அதன் மூலம் பெறப்படும் வாயு மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் முறை.
-
நுண்ணிய மின்கட்டமைப்பு (microgrid) அடிப்படையில் விநியோக மேலாண்மை செயல்பாடு அறிமுகப்படுத்தப்படுவது
-
ரேடியோ பண்பலை செயல்பாட்டின் மூலம் (RFID radio-frequency identification) மின்கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பி இணைப்புகளை பூமிக்கு அடியில் பொருத்தி இணைப்பது.
-
மின் உபயோகம் மற்றும் கட்டணம் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் வகையில் மீட்டர்கள் 100% குடியிருப்புகளில் பொருத்தப்படும்.
-
குடியிருப்புகளிலும் சூரிய மின் சக்தி சாதனங்களைப் பொருத்துதல்