- Log in to post comments
மயானங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்சார எரியூட்டு மையங்களில் உள்ள எரியூட்டு உலைகள் 870 முதல் 980 செல்சியஸ் டிகிரி வரை வெப்பநிலையில் செயல்படத்தக்கவை. இவற்றின் உலைகலன்கள் 150 kW முதல் 800 kW வரை மின்சக்தியில் செயல்படக்கூடியவை. எரியூட்டு உலைகலன்களை பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் வெப்பநிலையை முன்கூட்டியே தயார்நிலையில் வைப்பது அவசியம். இந்த மின்சார எரியூட்டு உலைகலன்கள் உயர்வெப்பநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய திறன்கொண்ட செங்கல்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. மின் தகனத்துக்குக் கொண்டு வரப்படும் ஒரு மனித உடல் எரிந்து சாம்பலாவதற்கு குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். இதற்குக் கூடுதல் மின்சக்தி தேவைப்படுகிறது.
மின்சாரத் தகன முறைக்கு மாற்றாக கண்ணம்மா பேட்டை மின் தகன மையத்தில் உடல்களை எரியூட்ட எரிவாயுவை (LPG) பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எரிவாயு தகன முறையின் மூலம் எரியூட்டப்படும் மனித உடல் எரிந்து சாம்பலாவதற்கு 45 நிமிட நேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உடல் தகனத்திற்கு எரிவாயுவை பயன்படுத்துவது மின் தகன முறையைக்காட்டிலும் சிக்கனமானது. எரியூட்டு மைய உலைகலன்கள் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கண்ணம்மா பேட்டை மயானம் மறுசீரமைப்புத் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரிவான சீர்மிகு சென்னை அமைப்பு மேற்கொண்டுள்ள, மக்களுக்குத் தேவையான அன்றாட அடிப்படை பயன்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த மயானம் எவ்விதக் குறைபாடுகளும், காத்திருப்பும் இன்றி மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது
மின் தகன உலைகலன்களை பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் வெப்பநிலையை முன்கூட்டியே தயார்நிலையில் வைப்பது அவசியம். இந்த மின்சார எரியூட்டு உலைகலன்கள் உயர்வெப்பநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய திறன்கொண்ட செங்கல்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன.
இதற்கு மாற்றாக, உடல்களை எரியூட்ட எரிவாயுவை (LPG) பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. உடல் தகனத்திற்கு எரிவாயுவை பயன்படுத்துவது மின் தகன முறையைக் காட்டிலும் சிக்கனமானது. எரியூட்டு மைய உலைகலன்கள் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.