திறன்மிகு நீர்
திறன்மிகு நீர்
ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்குதல் முறை, கழிவு நீர் அகற்று முறை, மற்றும் மழைநீர் வடிகால் மேலாண்மைக் கட்டமைப்பு.
சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தின் நிர்வாகத்தில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் வழங்கும் மையங்களில் Electromagnetic flow meters எனப்படும், நீர் இருப்பு மற்றும் பயன்பாட்டு அளவைக் குறிக்கும் மின்காந்த நீர் இருப்பு மற்றும் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் பொருத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதனைச் செயல்படுத்தும் விதமாக 11.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 251 மையங்களில் மின்காந்த நீர் இருப்பு மற்றும் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் பயனாக, குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் நீர் இருப்பு மற்றும் பயன்படுத்தப்படும் நீர் அளவின் ஒவ்வொரு துளியும் துல்லியமாகக் கணக்கிடப்படும்.