- Log in to post comments
மிதிவண்டிப் பாதை என்பது எரிபொருளற்ற இருசக்கர வாகனங்களுக்கான பிரத்தியேகப் பாதை. நகரின் பிரதான சாலைகளில் மிதிவண்டிகள் பயன்படுத்துவோரின் வசதிக்காகவென்றே வடிவமைக்கப்பட்ட பாதை. சென்னை நகர மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய அருகாமையிலுள்ள இடங்களுக்கு மிதிவண்டியில் செல்வதையோ நடந்து செல்வதையோ பெருநகர சென்னை மாநகராட்சி ஊக்குவிப்பதில் பெருமையடைகிறது. இதனை முன்னிலைப் படுத்தும் விதமாக, நகரின் பல்வேறு சாலைகளில் மிதிவண்டித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போன்றவை மிதிவண்டி பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள். மிதிவண்டியில் பயணம் செய்வதன் மூலம் சாலை நெரிசலைத் தவிர்க்கலாம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஒரு நாளுக்கு 10 கி.மீ. மிதிவண்டியில் பயணிப்பதன் மூலம் வருடத்திற்கு 1500 கிலோ அளவிற்கு எரிபொருள் நச்சு வாயு உமிழ்வைத் தவிர்க்கலாம். தவிர, சாலைப் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் மிதிவண்டி பயன்படுத்துவதன் மூலம் சாலை நெரிசலைத் தவிர்க்கவும் நச்சு வாயு உமிழ்வை இயன்ற அளவு குறைக்கவும் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.