- Log in to post comments
பாதசாரிகளுக்கான நடைபாதை, சாலையோரங்கள் போன்ற பல இடங்களில் முறையற்று வாகனங்களை நிறுத்துவது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக அமைந்துவிடுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் கட்டணங்கள் முறையாக இல்லாமல் வேறுபடுகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் பெரும் தொல்லைக்கு உட்படும் நிலை உருவாகிறது.
இந்த நிலைக்குத் தீர்வு காணவே பல அடுக்கு வாகன நிறுத்த மேலாண்மை நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்குத் தகுந்த இடம் கிடைக்காமல் வாகன ஓட்டுனர்கள் தடுமாறும் நிலை இனி இல்லை. இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவதன் மூலம் பாதசாரிகள் எவ்வித இடையூறுமின்றி தங்கள் வழியில் செல்லவும், மிதிவண்டி பயன்படுத்துவோர், அரசுப் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் எவ்வித பாதிப்பும் இன்றிச் செல்லவும் சாலைப் போக்குவரத்து சீராக இயங்கவும் இயலும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன நெரிசல்கள் அற்ற சாலைகள் – சென்னையில் ஒரு கனவு நனவாகியுள்ள நிலை
பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த மேலாண்மை முறை வகுத்துள்ள சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் சீரிய செயல்பாட்டுக்கு வழி செய்துள்ளது.
அனுமதியற்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றை கைப்பற்றி அருகாமையிலுள்ள காவல்நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் உரிமை பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த தொழில்நுட்ப முறைகள் மூலம் அனைத்து வசதிகளும் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டிடத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
சிறந்த தொழில்நுட்ப முறைகள் மூலம் அனைத்து வசதிகளும் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டிடத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.