- Log in to post comments
பெருநகர சென்னை மாநகராட்சியின் திட்டப்பணியின் கீழ் சீர்மிகு சென்னை நகரின் சாலைப் போக்குவரத்துக் கட்டமைப்பு இரண்டு விதமான வழிமுறைகளில் செயல்படுத்தப்படுகிறது
1. அறிவார்ந்த சாலைப் போக்குவரத்து மேலாண்மை
2. அறிவார்ந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மை
சாலைப் போக்குவரத்து மேலாண்மை என்பது வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, சாலைகளின் ஒவ்வொரு சந்திப்பிலும் சிக்னல் முறைகள் சரிவரப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது, சாலைப் போக்குவரத்தில் நெரிசல்களைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது.
வாகனப் போக்குவரத்து மேலாண்மை என்பது பேருந்துகளின் இயக்கம், வழித்தடங்கள், மின்பதிவுப் பயணச்சீட்டு முறை, பயணிகள் தொடர்பான தகவல் மற்றும் விவரங்கள் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது.
சாலைப்போக்குவரத்து ஒருங்கிணைப்பு நெடுஞ்சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக, குறிப்பாக சென்னை மாநகரத்தில் நகர வளர்ச்சி மற்றும் வாகனப்போக்குவரத்துக்கான அத்தியாவசியத் தேவைகள் பெருகியுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்து முறைகளில் மக்களுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதுடன், இவற்றில் ஏற்படும் இடையூறுகளை உடனடியாகக் களைந்து தீர்வு கண்டு அதற்கான பணித்திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டதுதான் அறிவார்ந்த சாலைப் போக்குவரத்து மேலாண்மை.
பெருநகர சென்னை மாநகராட்சியின் திட்டப்பணியின் கீழ் சீர்மிகு சென்னை நகரின் சாலைப் போக்குவரத்துக் கட்டமைப்பு இரண்டு விதமான வழிமுறைகளில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டப்பணியின் தலையாய செயல்பாடுளில் ஒன்று, சாலைப் போக்குவரத்து முறைகளைக் கட்டுப்படுத்துவது
சாலைப் போக்குவரத்து நிலை, வழித்தடத்தில் வந்து சேரும் நேரம், குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேர்வதற்கு ஆகக்கூடிய கால அவகாசம், காலி இருக்கைகள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் வழங்குவது
இதனால் பயணிகளின் பயணநேரம் சேமிக்கப்படுவதுடன், பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை வழங்குவது