- Log in to post comments
வெர்ட்டிகல் கார்டன் எனப்படும் படர் பூங்காக்களை நகரமெங்கும் உருவாக்குவதன் மூலம் பசுமை நிறைந்த சூழலை உருவாக்கி நகரக் கட்டமைப்பின் எழிலுக்கு மேலும் எழிலூட்டும் திட்டம் வளர்ச்சிக்கு இணையாக வர்த்தகம் மற்றும் குடியிருப்பு சார்ந்த கட்டிடங்கள் பெருகினாலும் இயற்கை சூழ்ந்த இடங்களும் சரிசமமாகப் பராமரிக்கப்படுவதுதான் நகரச் சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும். நகர வளர்ச்சிக்கு ஈடாக இயற்கைச் சுற்றுசூழலைப் பராமரிப்பது கடினம்தான். உலகெங்கும் நகரங்களில் நெரிசலும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடிதலும் அதிகரித்து வருகின்றன. பசுமை சூழல் உருவாக்கத் திட்டங்களினால் இதுபோன்ற பின்னடைவுகளிலிருந்து நகரங்களைப் பாதுகாக்க வழி பிறக்கும்.
மேம்பாலங்களைத் தாங்கும் தூண்களில் செடி கொடிகளைப் படரவிடுவதன் மூலம் சுற்றுச்சூழலில் போக்குவரத்தினால் ஏற்படும் வெப்பத்தைக் குறைத்து சமநிலை உருவாக்கும் செயல்திட்டம்.
இத்தகைய படர் பூங்காக்களை உருவாக்குவது மிகவும் எளிது. கட்டிட மேற்கூரைகளில் கலயங்கள், கொள்கலங்கள், தொட்டிகள் போன்றவகளில் விதைகள் அல்லது சிறு செடிகளை நட்டு வளர்க்கலாம்.
சாலை மேம்பாலங்கள் மற்றும் கட்டிடத் தூண்கள், சுற்றுச்சுவர்கள், போன்ற இடங்களில் செடி கொடிகளைப் படர விட்டு வளர்க்கலாம்.
கட்டிடங்களின் வெளிப்புற நடைபாதைகளின் இருமருங்கிலும் பல்வேறு தாவரங்களைப் பயிரிட்டு வளர்க்கலாம்.